News
36th year Art festival 2010 - 3rd December, 2010
வணக்கம்
கார்த்திக் பைன்ஆர்ட்ஸின் 36வது இசை விழாவின் மூன்றாவது நாளான இன்று மாலை ஏழு மணிக்கு மதர் கிரியேஷன் பிரியமுடன் அப்பா என்ற நாடகம் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற கோடை நாடக விழாவில் சிறந்த நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என மூன்று முதல் பரிசுகளை பெற்ற நாடகம் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உறவுகள் மெல்ல மெல்ல தனது தனித்தன்மையை இழந்து வருகிறது. வயோதிகம் என்பது இரண்டாவது குழந்தை பருவம் என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணர மறுக்கிறது.
அன்புக்காக மட்டுமே ஏங்கும் அவர்களின் உணர்வுகளை இளைய சமுதாயம் உதாசினபடுத்துகிறது. சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் ஒரு இளைஞன் தனது தந்தையை எவ்வாறு நடத்துகிறான் என்பதை உணர்வுபூர்வமாகவும் இந்த நாடகம் சித்தரிக்கிறது.
பெண் கதாபாத்திரமே இல்லாமல் வெறும் ஐந்து நடிகர்களை வைத்து விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் செல்கிறது இந்த நாடகம். நல்ல கருத்தை ஆணித்தரமாக விளக்கும் இந்த நாடகம் அனைவராலும் பாராட்டப்பட்டது, அனைவரும் பார்க்க வேண்டிய நாடகம்.
சி.வி. சந்திரமோகன்' கதை வசனம் இயக்கத்தில் உருவானது பிரியமுடன் அப்பா.